நவம்பர் புரட்சியின் நினைவாக..

how to order Misoprostol online without a prescription உலகின் முதல் உழைக்கும் மக்கள் ஆட்சி 1871ல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் அமைந்தது. அந்த ஆட்சி வெறும் 72 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது. அந்த அரசின் தோல்விக்குப் பிறகு அப்படி ஒரு அரசு இனி உலகில் எப்போதும் தோன்ற முடியாது என்றுதான் பலரும் நினைத்தனர். மீண்டும் 45 ஆண்டுகளுக்குப் பின் 1917 நவம்பர் 7 அன்று ரஷ்ய நாட்டில் தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த முறை உழைக்கும் மக்களின் ஆட்சி திடமாகவோ நோயுற்றோ 72 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. பல்லாயிரக் கணக்கானவர்கள் புரட்சியின்பொது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கெதிரான போரில் இரண்டரை கோடி மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து அந்த ஆட்சியைக் காத்தனர். அந்த தியாகங்களைஎல்லாம் வீணடித்து ரஷ்யாவில் மீண்டும் முதலாளியத்தை மீட்டெடுத்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆதரவான அந்தக் கூட்டம் கம்யூனிஸ்டுக் கட்சி என்ற பெயரில்தான் கடைசிவரை இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் வைத்திருப்பதாலேயே ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகிவிடாது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட சாட்சி ஆகிப் போனது. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்ட அலைகள் ஒருபோதும் ஓயாது. ஒவ்வொரு நவம்பரும் ரஷ்ய நாட்டின் புரட்சியாளர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

(நிகரன், இதழ்-9, பக்கம்-2)