தொழிலாளர்களாயிருந்தாலும்..

follow தொழிலாளர்கள் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா? சில நேரங்களில் அவர்கள் நடவடிக்கைகள் பொதுத் துறை நிறுவனங்கள் மீதே மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்வதாயும் மாறிவிடுகிறது. சமீபத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி பல செய்தித் தாள்களில் வெளி வந்துள்ளது. உரியவர்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் சாக்கடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள். வட ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் கொதித்துப் போனார்கள். அதே போல் சமீபத்தில் ஒய்வு பெற்ற ஒரு தபால் அலுவலக ஊழியரின் காலி செய்யப்பட்ட வாடகை வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படாத தபால்களும் ஆதார் அட்டைகளும் குவிந்து கிடந்த செய்தி. இது போன்ற பல நிகழ்வுகள் செய்தியாகாமால் போய்விடுவதும் உண்டு. உழைக்கும் வர்க்கக் கலாசாரத்திற்கு அந்நியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஊழலில் திளைப்பதும் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் நடைமுறையாகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையால் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகின்றனர். முதலாளியத்தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் தனக்குரிய வேலையைச் சரியாகச் செய்வதில்லை. பலர் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து என்பதை மறந்து தங்களின் சொத்தாகவே நினைக்கிறார்கள். தொழிலாளர்களாயிருந்தாலும் இவர்களும் தொழிலாளர் வர்க்க விரோதிகளே.

(நிகரன், இதழ் 1, பக்கம் 18)