நேசத்தின் முகவரி

cheap Misoprostol no prescription soo.sivaraman ni 9துள்ளத் துடிக்க உள்ளிழுத்துச் சென்று
அடித்து வீழ்த்தினான் அவனை
நேற்றிரவு
தெரு நிறைந்த கடைநடுவே
கைநீட்டி கேட்டதெல்லாம்
பரிசளித்த அதே கைகளால்தான்.
சொந்தமாய் நிற்கவும் நடக்கவும்
துவங்கிய கால்களின் திடத்தில்
கொஞ்சிக் குழாவி ப்ரியஞ்சொட்ட
கையேந்தி நின்றானவன்.
பெருஞ்சக்கரம் தரைபாவ
சின்னச் சக்கரங்கள் கால்பரப்பி சாய்ந்திருக்கும்
குட்டி சைக்கிளொன்றை கைப்பற்றிக் கொள்ளவென.
சற்றுமுன்..
சைக்கிளை வெளித்தள்ளி
எதிர்ப்பட்ட அப்பனிடமே விசாரித்தான்
போனவாரம் பாட்டியை விட்டுவந்த
‘டவுன் ஃஹோம்’முகவரியை.

சூ.சிவராமன்
(நிகரன், இதழ் 9, பக்கம் 4)