அறிமுகம்

ஒரு கலை இலக்கிய சிற்றிதழின் வலைத் தளமாகத் தொடங்கி ‘கம்யூனிசம் கற்போர் சங்கத்’தின் (Communist Readers Union) வலைத் தளமாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. கம்யூனிசம் தொடர்பான இலக்கியங்களைக் கற்பதற்கு உதவுவதே இந்த வலைத் தளத்தின் நோக்கம்.

கண்டதைக் கற்பதால் பொழுதுகள் அழியும்!
கம்யூனிசம் கற்பதால் நம்வழி தெளியும்!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
     திருக்குறள்

கல்வி கரையில; கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே; நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
நாலடியார்
கட்சி இலக்கியம் என்னும் கோட்பாடு
“கட்சி இலக்கியம் என்னும் கோட்பாடு என்பதென்ன? சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்துக்கு, இலக்கியமானது தனியாட்கள் அல்லது குழுக்கள் செல்வம் திரட்டிக் கொள்வதற்குரிய ஒரு சாதனமாய் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல இக்கோட்பாடு, உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொதுக்குறிக்கோளைச் சாராத ஒன்றாய், தனியாள் முயற்சியாய் இருக்க முடியாது என்பதும் ஆகும். கட்சி சார்பில்லா மனப்பாங்குடைய எழுத்தாளர்கள் ஒழிக! இலக்கியத்துறை மீமனிதர்கள் ஒழிக! (Down with literary supermen!) இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தினது பொதுக்குறிக்கோளின் ஒரு பகுதியாக வேண்டும், தொழிலாளி வர்க்கம் அனைத்தின் அரசியல் உணர்வு கொண்ட முன்னணிப் படை அனைத்தாலும் இயக்கப்படும் தனியொரு மாபெரும் சமூக-ஜனநாயகப் பொறியமைவைச் சேர்ந்த “பல் சக்கரமும் திருகும்” ஆகிவிட வேண்டும். ஒழுங்கமைந்த, திட்டமிடப்பட்ட, ஒருமித்த சமூக-ஜனநாயகக் கட்சிப் பணியில் இலக்கியம் ஒரு கூறாகிவிட வேண்டும்…”
வி. இ. லெனின்

CLASS VIEW

“People always have been the foolish victims of deception and self-deception in politics, and they always will be, until they have learned to seek out the interests of some class or other behind all moral, religious, political and social phrases, declarations and promises”.
VI Lenin

PARTY LITERATURE

 “Literature must become party literature. Down with unpartisan literateures! Down with superman of literature! Literature must become a part of the general cause of the proletariat.”
V I Lenin